Search This Blog

Friday, June 4, 2010

இந்தியாவின் பெருமைகள்!


*அமெரிக்க வாழ் இந்தியர்களில் ஒன்பதில் ஒருவர் மில்லினியராக இருக்கிறார்.


*அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களில் அதிகம் கற்றவர்கள் இந்தியர்கள்தான்.அமெரிக்க வாழ் இந்தியர்களில் 67% பட்டப் படிப்பு முடித்தவர்கள். 40% பேர் முதுகலை பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள். இது அமெரிக்க சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம்!


மேலும் பல அடுத்த வாரம்.

கவிதை நேரம்

வெறும் கை என்பது மூடத்தனம்!
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்!
உன் கையில் பூமி சுழன்று வரும்!
- ஒரு புத்தகத்தில் படித்தது.

படிப்புல பிளாப் வாழ்கையில டாப்


மைக்கல் பாரடே!!

'இறை சக்தியில் ஒரு சதவிகிதம்' என்று வர்ணிக்கப் படும் மின்சாரத்தை கண்டுபிடித்த இங்கிலாந்து மேதை இவர். பாரடேக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. எழுதப் படிக்கத் தெரிந்த கையோடு புத்தகம் பைண்டிங் செய்யும் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.

ஆனால், கடையில் பைண்டிங் செய்ய வரும் புத்தகங்களை தானாகவே ஆர்வமுடன் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். இயற்பியலிலும் வேதியியலிலும் எண்ணற்ற ஆராய்ச்சிகள் செய்தார். மின்காந்த விளைவு, பாரடே விளைவு போன்றவை இவரது கண்டுபிடிப்புகள் ஆகும்.

விசித்திர விளம்பரங்கள்!


அமெரிக்காவில் போல்ஜெர்ஸ் பிராண்ட் காபி மிகப் பிரபலம்! அங்கே பூமிக்கு அடியில் நீராவி விநியோகம் நடைபெறும். அதில் சில இடங்களில் பாதாள சாக்கடை வழியாக நீராவி கசிந்து கொண்டு இருந்தது. உடனே அதைச் சுற்றி காபி கப்பில் இருந்து ஆவி வருவது போல வரைந்து அதைத் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொண்டது.
விளம்பரங்களைப் பற்றி மேலும் அடுத்த வாரம் பார்ப்போம்.

avandia