நெல்லோடு சேர்ந்து
புல்லும் மண்டிக் கிடக்க
களையெடுக்கக் கிடைக்கவில்லை
கூலி ஆட்கள்
ஒட்டுமொத்த விவசாயத்தை
கவலைக்கிடமாக்கிவிட்டு எங்கேதான்
போயினர் கூலி ஆட்கள்?
தேடித் போனபோது கூடம் கூட்டமாய்
ரோட்டோர புளியமர நிழலில்
படுத்துக் கிடந்தனர்...
தூங்கி விழித்தால் 100 ரூபாய்
சம்பளமாம்... உழைக்கத் தேவையில்லை
'உத்தரவாதம்' உண்டாம்...
நூறு நாள் வேலைக்கு!
வாழ்க ஜனநாயகம்!?!?
வளருமா பாரதம்?
வயல்வெளிகளில் முளைக்கும்
வீடுகளுக்கு மத்தியில்
பிழைக்குமா விவசாயம்??
No comments:
Post a Comment